செய்திகள் :

"SIR -ல் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள்" - செல்லூர் ராஜூ

post image

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியிலுள்ள அரங்கத்தில் நடந்தது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, "அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை, ஏமாற்றுபவர்களுக்குக் கிடையாது. சூப்பர் ஸ்டார் சொல்வது போல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடன் இருக்கும் அனைவரும் வரலாம். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை, இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறை, சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.. சென்சார் போர்டு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக அதிமுக இடையேதான் போட்டி. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆரின் புகழைத்தான் பாடுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் என்றைக்காவது கலைஞர் ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லியுள்ளாரா? என் பெரியப்பா எம்.ஜி.ஆர் என்று தான் சொல்கிறார். அதிமுகவிலிருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் எத்தனையோ பேர் விலகினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொண்டரை நம்பிதான் இருந்தார்கள்.

எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களை நம்பிதான் உள்ளார், அதை வெளியில் சொல்லவில்லை. திமுக நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை.. இதைச் சொல்லியே நாம் ஓட்டு வாங்கி விடலாம்.

மதுரை மாநகராட்சி ஊழல் ஒன்று போதாதா? மாநகரிலுள்ள நான்கு தொகுதியில் வெற்றி பெற, மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் முடியாது. மதுரை மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும், இதை செய்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நான்கு தொகுதிகளிலும் யாரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறும்.

எஸ் ஐ ஆரில் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள், குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது என்று கலெக்டரிடம் தெரிவித்தேன்" என்றார்.

TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? - அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?

கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருக... மேலும் பார்க்க

தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்ப... மேலும் பார்க்க

இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

'இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது' - இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று. இந்தியா - நியூசிலாந்து பேச்சுவார்த்தை இந்தியா, ... மேலும் பார்க்க

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Ajithaதவெக சார்பில் ஏற்கெனவே 120 ... மேலும் பார்க்க

'உழைச்சவங்களுக்கு மதிப்பே இல்லையா?' - பனையூர் அலுவலகம் முற்றுகை; குமுறும் நிர்வாகிகள்!

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தை நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் முற்றுகையிட்டிருப்பதால் பரபரப்பாகியிருக்கிறது.பனையூர்தவெக சார்பில் 120 மாவட்டச் செயலாளர்களை விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.இன்னு... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மனைவி, வாரிசு, உறவுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள்: நெருக்கடியில் அரசியல் கட்சிகள்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற... மேலும் பார்க்க