TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?
Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025
வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் ஸ்வக்கி நிறுவனம் உணவு தவிர்த்து மற்ற பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தை நடத்தி வருகிறது. அந்த வர்த்தக தளத்தில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்து இன்ஸ்டாமார்ட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் நடப்பு ஆண்டில் இன்ஸ்டாமார்ட்டில் ஒருவர் மட்டும் அதிக பட்சமாக ரூ.22 லட்சத்திற்கு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு காண்டம் மட்டும் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த ஒருவர் ரூ.10-க்கு பிரிண்ட்-அவுட் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஒரே ஆர்டரில் ரூ.4.3 லட்சத்திற்கு ஐபோன்களை வாங்கி இருக்கிறார். மும்பையை சேர்ந்த ஒருவர் ரூ.15 லட்சம் செலவு செய்து ஆன்லைனில் தங்கம் வாங்கி இருக்கிறார்.
மெட்ரோ நகரங்களை தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 10 மடங்கு அதிகமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி இருக்கின்றனர் என்கிறது ஸ்விக்கி. அடுத்த இரண்டு இடத்தில் லூதியானாவும், புபனேஷ்வரும் இருக்கிறது. கரிவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழம் போன்ற பொருட்கள் அதிக அளவில் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்படுகிறது.
பசுமைக்கு புகழ் பெற்ற கேரளா மாநிலம் கொச்சியில் கரிவேப்பிலை மட்டும் நடப்பு ஆண்டில் 368 முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் அதிக அளவில் ஆர்டர்கள் செய்யப்படுகிறது. டெலிவரி செய்ய வருபவர்களுக்கு பெங்களூரு மக்கள் ரூ.68 ஆயிரத்தை டிப்ஸாக கொடுத்து தங்களது தாராள மனதை காட்டி இருக்கின்றனர். ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரை 1092 கோடி நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















