"ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்"- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பே...
“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” - கே.பாலசந்தர் நினைவு நாளில் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள்.
இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும்.
இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.
“இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.




















