"Vijay-கிட்ட நான் வியந்த விஷயம், அரசியல் Entry-ஆ?" | Arcot Nawab Interview
காற்று மாசு: ``டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே தொற்று வந்துவிடுகிறது" - அமைச்சர் நிதின் கட்கரி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது.

டெல்லி ஏன் மாசுபாட்டால் தத்தளிக்கிறது? புதைபடிவ எரிபொருட்களால்தான் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது. நான்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர், 40 சதவீத மாசுபாடு எங்களால்தான் ஏற்படுகிறது.
புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக ரூ. 22 லட்சம் கோடி செலவழித்து, மாசுபாட்டை அதிகரித்து வருகிறோம். இது என்ன தேசபக்தி?
சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு நம்மால் தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியாதா?
ஒருவர் எந்த அளவுக்கு அடிப்படைவாதி மற்றும் விஷத்தன்மை கொண்டவர் என்பதில் ஒரு தரவரிசை இருக்க வேண்டும். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நமது முன்மாதிரி; டாக்டர் கலாம் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அ
வர்களுக்குக் கல்வி கொண்டு செல்லப்பட வேண்டும். முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன். தேநீர்க் கடைகள், பஞ்சர் கடைகள் நடத்துகிறார்கள், அவர்களிடம் கல்வியின்மையும் மக்கள்தொகை பெருக்கமும் உள்ளன.
நாட்டில் உள்ள இந்து-முஸ்லிம் பிரச்னைகள் காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலின் விளைவு. மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி என்று அர்த்தம். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காகக் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் இந்தப் பிரச்னையை உருவாக்கின. நமது கலாசாரம் வகுப்புவாதமோ சாதியவாதமோ அல்ல.
இந்துத்துவம் தாராள மனப்பான்மை கொண்டது. சகிப்புத்தன்மை கொண்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது மதச்சார்பற்றதாக இருந்தது, மதச்சார்பற்றதாகவே இருக்கும்.
அதற்குக் காரணம் பா.ஜ.கவோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அல்ல. இது பாரதிய இந்து கலாசாரம். சனாதன கலாசாரம் முழு உலகின் நலனுக்காகவும் வாழும் வாழ்வை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றார். அதே கருத்துதான் என்னுடையதும்" என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இம்ரான் மசூத், ``குறைந்தபட்சம் காட்கரிக்காவது காற்று மாசை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் இருந்தது. நீங்கள் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும்போது, இதற்கும் ஒரு தீர்வைக் கூறுங்கள்.
வாகனங்கள் மட்டும்தான் மாசுபாட்டிற்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என்றார்.

















