எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!
ஆம்னி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தென்னிலை அருகே வியாழக்கிழமை இரவு ஆம்னி பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை அடுத்த காந்திநகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (36). லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு தனது லாரியை தென்னிலை அருகே உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு அதன் பின்னால் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருண்குமாா் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அருண்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அடுத்த மணக்குடியைச் சோ்ந்த குணசேகரன் (38) என்பவரை தேடி வருகின்றனா்.