செய்திகள் :

ஆம்பூர்: பள்ளி மாணவனை விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டல் - எஸ்.பி-யிடம் சிக்கிய சிறப்பு எஸ்.ஐ!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தில், பொதுவழிப் பாதை பிரச்னை தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை என்பவர்களின் குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வருகிறது.

இருக்குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தகராறு கைகலப்பாக மாறியது. இதுபற்றி, உமராபாத் காவல் நிலையத்தில் இரு வீட்டாரும் புகாரளித்திருக்கின்றனர்.

அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்துவதற்காக ராமாபுரம் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு ஒருதரப்பைச் சேர்ந்த மணிமேகலை இல்லை.

இதனால், எதிர் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொண்ட போலீஸார் மணிமேகலையின் மகனான பிளஸ்-2 பயிலும் மாணவனை காவல் நிலையத்துக்கு வலுகட்டாயமாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்

இதையறிந்த மணிமேகலை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று மகனை விடுவிக்குமாறு கேட்டிருக்கிறார்.

அப்போது பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் என்பவர் ``ரூ.10 ஆயிரத்தை எடுத்து வச்சிட்டு, உன் பையன கூட்டிக்கிட்டுப் போ. பணம் தரலைனா, உன் பையன் மேல பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்" என்று வெளிப்படையாகவே மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை போலீஸ் உயரதிகாரிகளிடம் நடந்தவற்றைக் கூறி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது புகாரளித்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அக்‌ஷய் அனில் வாகரே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, லஞ்சம் கேட்டது உண்மை தானா? என்று விசாரிக்க உத்தரவிட்டார்.

துறைரீதியான விசாரணையில், லஞ்சம் கேட்டு மிரட்டியது நிரூபணமானதால் மதியழகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி அக்‌ஷய் அனில் வாகரே.

போலி உத்தரவில் ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கைதி மனைவியுடன் உறவு? கர்நாடக சிறை அதிகாரி கைது பின்னணி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மத்திய சிறையின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளரும், தற்போது சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி வருபவர் சோமசேகர். இவர் பெங்களூரு மத்திய சிறைய... மேலும் பார்க்க

பரப்பன அக்ரஹாரா சிறை: ஆயுள் தண்டனை கைதியின் மனைவியிடம் பாலியல் சுரண்டல் - மத்திய சிறை டி.ஐ.ஜி கைது

கைதியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் டி.ஐ.ஜி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2004-ம் சிஃபாஸ்ட் டிராக் நீதிமன்றத்தால் ஆ... மேலும் பார்க்க

7-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டல் - மதபாடசாலை ஆசிரியர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பகுதியில் ... மேலும் பார்க்க

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு; நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு

நாகர்கோவிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா பணம், நகைகளைக் காண்பித்து வீடியோ பதிவிடுவது வழக்கம். குழந்தைக்கு பண குளியல் நடத்துவது, நகைகள் வாங்க செல்வது என அனைத்தையும் வீடியோவாகப் பதிவிட்டுவந்தார். இந்த நி... மேலும் பார்க்க

திருத்தணி: ஒருதலைக்காதல்; சிறுமியின் அப்பா கொலை - போலீஸார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தார. இவரின் மனைவி துர்கா இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ராஜாவின் ஒரு மகளுக்கு 17 வயதாகுகிறது. அவர் அ... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுடன் தொடர்பு' - மும்பையில் 5 முதியோர்களை டிஜிட்டல் கைது செய்து ரூ.2.3 கோடி பறிப்பு

சைபர் குற்றவாளிகள் முதியோர்கள் மற்றும் பெண்களை பணமோசடி, போதைப்பொருள் குற்றச்சாட்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மிரட்டி அல்லது டிஜிட்டலில் கைது செய்து ஆன்லைனில் பணம் பறிக்கும... மேலும் பார்க்க