செய்திகள் :

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!

post image

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேசி கலகலப்பூட்டினார்.

தனியரசு
தனியரசு

அவர் பேசியதாவது, 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம். தொகுதி பங்கீடு குழுவுடன் பேசியிருக்கிறோம். தகுதியான இடங்களை பெறுவோம். திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும்.

2021 வரை அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்திக்கிறது. கொள்கைகளை வலிமையாக பற்றி நிற்கிற தனியரசு அங்கே இருக்க வாய்ப்பே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி எதையும் மாற்றவில்லை. NDA இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையும்.

2 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். வெற்றிக்கு வாய்ப்புள்ள தொகுதியை தலைவரிடம் பேசி கொடுப்பதாக குழுவினர் கூறுகின்றனர். ஒரு தொகுதி அதுவும் வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதி எங்களுக்கு உறுதி.

தனியரசு
தனியரசு

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தேர்தலுக்கு முன்பே அந்த கூட்டணி தோற்கும் என கூறிய ஒரே ஆள் தனியரசுதான்.

நாங்கள் ஒரு ஏழைக்கட்சி' என முடித்தவுடன், 'சார் இத்தனை பேரோட சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துறீங்க. நீங்க ஏழை கட்சியா?' என ஒரு நிருபர் கேட்க, 'ஆமாங்க, காலையில கூட நாங்கெல்லாம் 3 இட்லி மட்டும்தான் சாப்பிட்டோம். ஆம்லேட், வடை கூட சாப்பிடலை. நைட்டும் வெறும் புரோட்டா மட்டும்தான் சாப்பிடுவோம். உலகத்திலேயே ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி நாங்கள் மட்டும்தான்' எனக் கூறி வினோதமாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.நாளை காலை புதுச்சேரியில் நடக்கு... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.கருணாஸ்அவர் பேசியதாவது, 'மீண்டும் திமுகவ... மேலும் பார்க்க

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" - குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிக... மேலும் பார்க்க

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' - என்ன சொல்கிறார் வேல்முருகன்

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.வேல்முருகன்அவர் பேசியதாவது, 'தவாகவுக்கு கூட... மேலும் பார்க்க