செய்திகள் :

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

post image

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணமாக இரு நாடுகளும் கூறுவது...

> ஈரானின் அணு ஆயுதங்கள்

> ஈரான் இரு நாட்டு மக்களுக்கும், அந்த அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது போன்றவை தான்.

ஈரான்‌ மீதான தாக்குதல்
ஈரான்‌ மீதான தாக்குதல்

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையும், அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பும் உறுதிபடுத்தியுள்ளனர்.

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலின் போது, காமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா என்கிற தகவல் இன்னும் தெரியவில்லை.

கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் ஈரான் மீதான தாக்குதலை முதலில் தொடங்கியது இஸ்ரேல். அதன் பின், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஆனால், இன்றோ, அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் ஒன்றாக ஒரே நேரத்தில் களத்தில் இறங்கி ஈரானை தாக்கி வருகிறது.

இவர்கள் நோக்கம் ஒன்று தான் - ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.

ட்ரம்ப் பேச்சு

இந்தத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பேசும்போது...

"தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் உலகின் நம்பர் ஒன் நாடு ஈரான்.

கடந்த 47 ஆண்டுகளாக, ஈரான் 'அமெரிக்காவிற்கான மரணத்திற்காக கோஷமிட்டு வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரானின் பிராக்ஸிக்கள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போர் கூட ஈரானுடையது தான். ஹமாஸ் ஈரானின் பிராக்ஸிகள்.

அந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்" என்று கடுமையாக பேசியுள்ளார்.

ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.கருணாஸ்அவர் பேசியதாவது, 'மீண்டும் திமுகவ... மேலும் பார்க்க

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" - குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேச... மேலும் பார்க்க

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' - என்ன சொல்கிறார் வேல்முருகன்

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.வேல்முருகன்அவர் பேசியதாவது, 'தவாகவுக்கு கூட... மேலும் பார்க்க

'விஜய்யின் கதை நேற்று மாலையோடு முடிந்தது!' - அறிவாலயத்தில் தமீமுன் அன்சாரி!

அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படு... மேலும் பார்க்க

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.Congressஅதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது... மேலும் பார்க்க