செய்திகள் :

"ஆயிரம் பிரச்னை இங்க இருக்கு அதை..!"- டெல்லி போராட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் என்ன?

post image

போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் சங்ககிரியில் இன்று (ஜூலை.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இங்கு இருக்கும் பிரச்னையை பாருங்கள். அதை அவர் பார்த்துப்பார். சங்ககிரிக்கு வந்திருக்கிறேன்.

ஆயிரம் பிரச்னைகள் இங்கு இருக்கிறது. பேருந்து வரவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜன நாயகன் விஜய்
ஜன நாயகன் விஜய்

இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும். பாதியிலேயே நிற்கும் பணிகள் நிறைய இருக்கிறது. அதனைத் திறம்பட மக்களுக்கு செய்து தர வேண்டும். அவர்கள் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து 'ஜனநாயகன்' ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு, "இதனை ஒரு பண்டிகை மாதிரி பார்க்கிறோம். இந்தப் படத்தில் நான் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது பொற்காலம்" என்று பதிலளித்திருக்கிறார்.

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: 'சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'- அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், ... மேலும் பார்க்க

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.!" - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங... மேலும் பார்க்க

`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' - உ.வாசுகி

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

தற்கொலை நல்லது | உளவன் 10

உளவன் 10 தற்கொலை நல்லதுவெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படும் அலுவலகம். காற்றும் வெளிச்சமுமில்லாத கூண்டு அது. மூச்சு முட்டச் செய்யும் அறை. கசகசப்பும் இறுக்கமும் அங்கு இயல்பு. இதனோடு தலைவர் மாண்டே... மேலும் பார்க்க

'MGR ரெபரன்ஸ்; திமுக அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னணி!' - 'ஜனநாயகன்' யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்'. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகே 'ஜனநாயகன்' படத்தின் சூட்டிங் தொடங்கியது. அதனால் ஆரம்... மேலும் பார்க்க

Ban NEET Vs Fair NEET:`நீட் தேர்வு திருத்தமா அல்லது முழுமையான ரத்தா?'- போராட்டம் செல்லும் பாதை என்ன?

டெல்லி: மாணவர்களின் போராட்டம்நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த 20-ம் த... மேலும் பார்க்க