செய்திகள் :

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

post image

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மையத்தின் உற்பத்திப் பிரிவு துணைப் பொது மேலாளராக பதவி வகித்து வரும் சாரதா என்பவர் கடந்த சில வருடங்களாகவே ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய் , வெண்ணையை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சாரதாவின் அலுவலக அறைக்குள் ஆவின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது , சாரதா பயன்படுத்தி வந்த மேஜைக்குள் 40 கிலோ நெய் டப்பாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

நெய் டப்பாவுடன் சாரதா

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி ஆவின் நிறுவனம் மீதான பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முதற்கட்டமாக சாரதாவை பணியிடை நீக்கம்‌ செய்து உத்தரவிட்டுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆவின் நிறுவன துணை பொது மேலாளர் வருடக்கணக்கில் நெய், வெண்ணெய் போன்றவற்றை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சாரதா மீது முறையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க