செய்திகள் :

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' - ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

post image

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.

ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதல்

இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன.

அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், "இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி.

பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது" என்றார்.

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்க... மேலும் பார்க்க

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்கு... மேலும் பார்க்க

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும... மேலும் பார்க்க

நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளி... மேலும் பார்க்க