செய்திகள் :

`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு

post image

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வீடு இல்லாத ஏழைகள் இந்த குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் அது போன்று கஷ்டப்படும் ஏழைகளுக்கு யாசகம் பெற்று வாழ்பவர் உதவி செய்து வருகிறார்.

அங்குள்ள பதன்கோட் என்ற இடத்தில் யாசகம் பெற்று வாழ்பவர் ராஜு. இவர் தனது பகுதியில் வீடு இல்லாமல் தெருக்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக போர்வை வழங்கி வருகிறார். பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 வாங்கி அதில் கிடைத்த பணத்தை கொண்டு 500 போர்வை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்து உதவி இருக்கிறார்.

இது குறித்து ராஜு கூறுகையில், ''தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொறுப்பை கடவுள் எனக்கு கொடுத்து இருக்கிறார்.

பொதுமக்கள் கொடுக்கும் சிறிய தொகையை கொண்டு இந்த போர்வையை வாங்கி கொடுக்கிறேன். கடவுள் தொடர்ந்து காரியங்களை நிகழ்த்துகிறார். நானும் என் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். தற்போது வசிப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறேன். எனவே அரசு எனக்கு நிரந்தர வீடு வழங்கி உதவி செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டார். ராஜுவின் முயற்சிகளைப் பாராட்டிய உள்ளூர்வாசிகள், சமுதாயம் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பின்தங்கிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ராஜுவின் செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ராஜு சமூக வலைத்தளத்திற்கு புதிது கிடையாது. கொரோனா காலத்திலும் தேவைப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரது முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி கூட தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு ராஜுவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வுப்பூர்வ சந்திப்பு: மும்பையில் வழித் தவறிய தாய் - 12 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்து வைத்த போலீஸ்

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போ... மேலும் பார்க்க

`3 பங்களா, 3 ஆட்டோ, கார், கந்துவட்டி' - இந்தூரில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த மாற்றுத்திறனாளி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் எடுத்து வாழ்ப்வர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நகர் முழுவதும் யாசகம் எடுப்பவர்களை பிடித்து சென்று முகாம்களில் அடைத்தது. அங்க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவர்களை வேட்பாளர்களாக்கிய அஜித்பவார்; சிறையிலிருந்தே வென்ற பெண்கள்; பின்னணி என்ன?

புனே மாநகராட்சித் தேர்தலில் கேங்க்ஸ்டர் பாண்டு ஆண்டேகரின் உறவுக்கார மகளிர் சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டனர்.பாண்டு ஆண்டேகரின் மருமகள் சோனாலி மற்றும் மைத்துனி லட்சுமி ஆகியோர் கொலை வழக்கில் சிறையி... மேலும் பார்க்க

41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களி... மேலும் பார்க்க

பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!

மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம... மேலும் பார்க்க