'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' - பின்னணி என்ன?
"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவு அவரின் காதல் முறிவு தொடர்பாக இருக்கிறது என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணலில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் மனம் திறந்து பேசியிருந்தார்.

அந்தப் பேட்டியில், ``என்னுடைய பழைய உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் நான் கடுமையான மன ரீதியான கொடுமைகளுக்கு (Narcissistic Abuse) ஆளானேன். அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தேன்.
எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களும் உள்ளன. முழுமையாகக் குணமடைந்த பிறகே அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன்" என்று கூறியிருந்தார். அவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி பெண்கள் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "நிவின் பாலி 12 வருடங்களுக்கு முன்பே இதை என்னிடம் கூறினார்" என்று பதிவிட்டிருக்கிறார் அனுபமா.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் நிவின் பாலி, " தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது, சில இடங்களுக்குச் செல்லக் கூடாது, குறிப்பிட்ட உடைகளை அணியக் கூடாது, சீக்கிரமாக வீட்டுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். வீட்டில், கல்லூரியில், விடுதிகளில் என அனைத்து இடங்களிலுமே அவர்கள் கட்டுப்பாடுகளைச் சந்திக்கிறார்கள்.

ஆனால் பெண்களால் ஓடி அடைய முடியாத தூரமோ, எட்ட முடியாத உயரமோ, தாண்ட முடியாத தடைகளோ எதுவுமில்லை. உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். நிம்மதிக்காகவும், உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகளுக்காகவும் உழையுங்கள். உங்களுக்காக யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. தைரியமாக முன்னோக்கிச் செல்லுங்கள்" என்று பேசியிருக்கிறார்.
2015-இல் வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் அனுபமா அறிமுகமானார். அதில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















