செய்திகள் :

இந்தியாவின் உயரிய விருது: தமிழ்நாட்டுக்கு 5 'பத்ம' விருதுகள்; யார் யாருக்கு விருது?

post image

குடியரசு தினம் நாளைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்று, 2026-ம் ஆண்டிற்கான உயரிய விருதான பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சமூக சேவை, கலை, கலாச்சாரம், கல்வி, பொது விவகாரங்கள் மற்றும் பிற துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மொத்தம் 45 சாதனையாளர்கள் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நேரில் கௌரவிக்கப்படுவார்கள்.

புண்ணியமூர்த்தி நடேசன் - ஓதுவார் சுவாமிநாதன் - ஆர். கிருஷ்ணன்
புண்ணியமூர்த்தி நடேசன் - ஓதுவார் சுவாமிநாதன் - ஆர். கிருஷ்ணன்

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் உலகிலேயே மிகப்பெரிய இலவச நூலகத்தை நிறுவிய முன்னாள் பேருந்து நடத்துநர், ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கிய குழந்தை நல மருத்துவர், அரிய பாரம்பரிய இசைக்கருவியைப் பாதுகாத்து வரும் 90 வயது பழங்குடியின இசைக்கலைஞர் என 45 பேர் இந்த ஆண்டு 'அறியப்படாத நாயகர்கள்' பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் இசை மற்றும் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து வளர்த்து வரும் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் - பக்தவச்சலம்
ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் - பக்தவச்சலம்

சிற்பக் கலையில், குறிப்பாக வெண்கலச் சிற்பங்களை வடித்தெடுத்தலில் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டரின் பங்களிப்புக்காகவும், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக் கலையைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

இது தவிர 20 மொழிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளுடன் மிகப்பெரும் தனியார் 'புஸ்தக மானே' எனும் நூலகத்தை உருவாக்கிய கர்நாடக மாநில அங்கே கவுடாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தாய்ப்பால் வங்கித் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திய மும்பை குழந்தை நல மருத்துவர் அர்மிடா பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. ச... மேலும் பார்க்க

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை?" - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தா... மேலும் பார்க்க

"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்... மேலும் பார்க்க

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை.விஜய்அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்த... மேலும் பார்க்க

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே' கணக்கு!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை. நிர்மல் குமார்அவர்... மேலும் பார்க்க