செய்திகள் :

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" - நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

post image

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முடியாது. இந்தியர்கள் நாங்கள் பெரிய உள்ளம் கொண்டவர்கள்.

நாங்கள் விருந்தோம்பல் செய்கிறோம். நாங்கள் இவ்வளவோ கொடுத்துள்ளோம். நாங்கள் எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். அந்த நாட்கள் விரைவில் திரும்ப வர வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்திக்கிறேன். நான் காந்திஜியை உண்மையாகவே நம்புகிறேன். அவருடைய மூன்று குரங்குகள் எல்லோருக்கும் தெரியும்.

தீயதைக் காணாதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே. ஆனால் இன்று எனக்கு நான்காவது குரங்கு வேண்டும். யாராவது தவறாகப் பார்த்தால், அதை யார் திருத்துவார்கள்?'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

சஞ்சய் தத் இந்தியாவில் அமைதியை உணரவில்லை என்று கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்துக்கு சஞ்சய் தத் விளக்கம் அளித்து இருந்தார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், ''எந்தவொரு தனிநபர், சமூகம் அல்லது நிறுவனத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது அல்லது அவமரியாதை செய்வது எனது நோக்கமல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது கருத்துக்கள், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட உரையாடலின் பின்னணியில் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்.

முன்னா பாய் போன்ற படங்களில் காணப்படும் நகைச்சுவை மற்றும் நையாண்டி போன்றது, குறிப்பாக காதல், அரவணைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத் தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மும்பை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. அவர் சில நாட்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. Ramayana ... மேலும் பார்க்க

Oscars: "ஆஸ்கர் தேர்வில் அரசியல் இருக்கிறது!" - அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்

ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலி... மேலும் பார்க்க

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப... மேலும் பார்க்க

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க

'பெருமையால் அழுகிறேன்..!'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்... மேலும் பார்க்க

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதி... மேலும் பார்க்க