செய்திகள் :

'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

post image

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார்.

மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறித்து அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன், இந்தியா குறித்த சில கருத்துகளை உள்நாட்டு பத்திரிகைகளுக்கு பகிர்ந்துள்ளார்.

என்ன சொல்லியிருக்கிறார் அவர்?

"இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பெரியளவில் இல்லை. அதுபோல, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளும் அழுத்தத்தில் உள்ளன. இப்படி அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள். பிற சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

மோடி நெதர்லாந்திற்கு சென்றிருந்தபோது இந்தக் கருத்து எதுவும் மோடி - ராப் ஜெட்டன் சந்திப்பில் எட்டிப்பார்க்கவில்லை. எட்டிப்பார்க்காததுபோல இரு நாட்டு அதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர்.

சிபி ஜார்ஜ்
சிபி ஜார்ஜ்
மோடி நெதர்லாந்து பயணத்தை முடித்து ஸ்வீடனுக்கு ஃபிளைட் ஏறியதும், இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ் ராப் ஜெட்டனின் பேச்சிற்கு பதிலளித்துள்ளார்...

"இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் நிலை குறித்துப் பேச வேண்டும் என்றால்... என்னுடைய அனுபவத்திலிருந்து நான் ஒன்று சொல்கிறேன். பொதுவாக, இப்படிப்பட்ட கேள்விகள் ஏன் வருகின்றன என்றால், இதைக் கேட்கிறவர்களுக்கு இந்தியாவைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை என்பதுதான் அர்த்தம்.

இந்தியா என்பது 140 கோடி மக்கள் வாழும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நாகரிகம் கொண்டது.

கலாசாரம், மொழிகள், உணவு, மதம் என எல்லாவற்றிலும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசம். இந்தியாவைப் பாருங்கள், அது எவ்வளவு அழகானது என்று உங்களுக்கே தெரியும்.

உலகிலேயே மிகப்பெரிய நான்கு முக்கிய மதங்கள்—இந்து மதம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய மதம்—ஒரே நாட்டில் தோன்றியது என்றால் அது இந்தியாவில்தான்.

இந்தியா
இந்தியா

இந்த மதங்கள் இந்தியாவில் தோன்றி, அங்கேயே தொடர்ந்து தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன.

மறுபடியும் இந்தியாவைப் பாருங்கள்; உலகின் அனைத்து முக்கிய மதங்களும் இந்தியாவை நோக்கி வந்துள்ளன. யூத மதம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து வருகிறது.

இங்கிருக்கும் மற்ற மதங்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறது. உலகிலேயே யூத மக்கள் எந்தவிதமான ஒடுக்குமுறைக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ ஆளாகாத மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று—இதுதான் இந்தியாவின் அழகு.

அடுத்து, இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்தைப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, உடனடியாகக் கிறித்தவ மதம் இந்தியாவிற்குள் வந்தது, இன்றும் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமான கிறித்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவி... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய்-ன் வீழ்ச்சியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது இதனால்தான்' - நிபுணர் சொல்வதென்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. தற்போது சந்தையில் ஒரு டாலருக்கு ரூ.96-ஐ தாண்டி வர்த்தகம் ஆகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடல் - நிம்மதியடைந்த பொதுமக்கள்!

தமிழக அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட உள்ளன.அவற்றுள் மிகவும் கவனம் ப... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வெளியேறியிருக்கலாம்!’ - திமுக - காங்கிரஸ் முறிவு குறித்து நாராயணசாமி

``தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்...!’புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று 17-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும்... மேலும் பார்க்க

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' - சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க

“ஆரவாரத்தால் அதிர போகும் சேப்பாக்கம்.!” - தோனியின் `Last' என்ட்ரியை காண வரும் முதல்வர் விஜய்?

சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்க... மேலும் பார்க்க