செய்திகள் :

'இந்த கூட்டணி புதுசா இருக்குணே...' - டெல்லியை வெல்ல வைத்த சமீர் ரிஷ்வி & ஸ்டப்ஸ் கூட்டணி!

post image

லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் டார்கெட்டை 6 விக்கெட் கையிருப்பில் சேஸ் செய்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி அணி.

DC
DC

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதுவரை நடந்த போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்துவீச்சையே தேர்வு செய்தனர்; அதே ஃபார்முலாவை அக்சரும் பின்பற்றினார்.

முதலில் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, போட்டியின் போக்கை அப்படியே டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார்கள் பவுலர்கள்.

கடந்த சீசனில் காயம் காரணமாக பெஞ்சில் இருந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை தட்டித் தூக்கி உள்ளார்.

Ngidi
Ngidi

இங்கிடி 3, அக்சர் படேல் 1, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் பேட்டிங் ஆர்டரை தகர்த்தெரிந்தனர்.

18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ அணி.

அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் (35), அப்துல் சமது (36) ரன்கள் எடுத்தனர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கினார்கள் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முகமது சமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்திலேயே K.L. ராகுல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

முதல் இன்னிங்ஸில் பொழிந்த விக்கெட் மழை இரண்டாவது இன்னிங்ஸிலும் விடாமல் பொழிய, பவர் பிளே முடிவதற்குள் ஆல் அவுட் ஆக வேண்டும் என்று ஆடியது போல் இருந்தது டெல்லி அணியின் பேட்டிங்.

பவர் பிளே முடிவில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதல பாதாளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த டெல்லி அணியை, சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மீட்டெடுக்க, போட்டி இன்னும் விறுவிறுப்பாகியது.

Rizvi & Stubbs
Rizvi & Stubbs

சமீர் ரிஸ்வி 70 (47) ரன்கள் எடுத்து டெல்லியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.

PBKS vs GT:``இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" - தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 ஓவர்களில் துரத்தி, ... மேலும் பார்க்க

சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! - என்ன நடந்தது?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. Punjabஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேய... மேலும் பார்க்க

'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' - CSK பரிதாபங்கள்!

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. 'இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா...' என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்... மேலும் பார்க்க

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' - எப்படி வென்றது ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.RR vs CSKம... மேலும் பார்க்க

'ஆடினே இருப்பேன்!' - காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! - எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், 'எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்' கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி ... மேலும் பார்க்க

வாடகை பாக்கியால் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்திய கால்பந்துக்கு மீண்டும் ஒரு அவமானம்!

இந்தியா - ஹாங்காங் இடையேயான கால்பந்து போட்டி மார்ச் 31-ம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 2016-க்குப் பிறகு இந்திய அணி கொச்சியில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்ட... மேலும் பார்க்க