செய்திகள் :

Trump: "ஈரானின் புதிய அதிபர் போர் நிறுத்தத்தைக் கேட்கிறார்; ஆனால், அதற்கு..." - ட்ரம்ப் பதிவு

post image

இன்னும் 2 - 3 வாரங்களில் ஈரான் போர் நிறைவு பெற்றுவிடும் என்று நேற்று 'ஹின்ட்' கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இதைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் குறித்து இப்போதும் ஒரு தகவலைத் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

அதில்...

"ஈரானின் புதிய அதிபர் அமெரிக்காவிடம் போர் நிறுத்தத்தைக் கேட்டுள்ளார். இவர் தனக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களை விட, மிகக் குறைந்த தீவிரப்போக்கு கொண்டவர் மற்றும் அதிக புத்திசாலி ஆவார்.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு, அங்கே தடையின்றி, சீராக அனைத்தும் நடக்கும்போது, போர் நிறுத்தத்தைப் பற்றி சிந்திப்போம்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அதுவரை ஈரானைக் கடுமையாகத் தாக்குவோம்... அவர்கள் சொல்வதுப்போல, கற்காலத்திற்குள் தள்ளுவோம்".

ட்ரம்ப், 'ஈரானின் புதிய ஆட்சியாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம்...', 'பேச்சுவார்த்தை நன்றாகச் சென்றுக்கொண்டிருக்கிறது...', 'அதோ...', 'இதோ...' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இதை ஈரான் முற்றிலும் மறுக்கிறது.

ட்ரம்பும், அவரது அதிகாரிகளும் ஈரானில் இருக்கும் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

"அந்த ஒருவரால்தான் அது நடக்கவில்லை" - திமுக - அதிமுக இணைய முயன்ற கதை தெரியுமா? | Vote Vibes

தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் இரு துருவங்கள் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த இரு கட்சிகளையும் இணைக்க 1970-களின் இறுதியில் ஒரு தீவிர முயற்சி நடைபெற்றது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இ... மேலும் பார்க்க

12 டன் KitKat மொத்தமாக திருட்டு.! சங்கடத்தை கூட சந்தையாக்கிய நிறுவனங்களின் நூதன யுக்தி!

திருட்டு போன 12 டன் கிட்கேட் ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் பெரும் இழப்பு, எப்படி ஒரு சாதுர்யமான விளம்பர வாய்ப்பாக மாற முடியும் என்பதற்கு சமீபத்திய கிட் கேட் திருட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியு... மேலும் பார்க்க

"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" - ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரி... மேலும் பார்க்க