'இந்த கூட்டணி புதுசா இருக்குணே...' - டெல்லியை வெல்ல வைத்த சமீர் ரிஷ்வி & ஸ்டப்ஸ்...
'இந்த கூட்டணி புதுசா இருக்குணே...' - டெல்லியை வெல்ல வைத்த சமீர் ரிஷ்வி & ஸ்டப்ஸ் கூட்டணி!
லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் டார்கெட்டை 6 விக்கெட் கையிருப்பில் சேஸ் செய்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி அணி.

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதுவரை நடந்த போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்துவீச்சையே தேர்வு செய்தனர்; அதே ஃபார்முலாவை அக்சரும் பின்பற்றினார்.
முதலில் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, போட்டியின் போக்கை அப்படியே டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார்கள் பவுலர்கள்.
கடந்த சீசனில் காயம் காரணமாக பெஞ்சில் இருந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை தட்டித் தூக்கி உள்ளார்.

இங்கிடி 3, அக்சர் படேல் 1, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் பேட்டிங் ஆர்டரை தகர்த்தெரிந்தனர்.
18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ அணி.
அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் (35), அப்துல் சமது (36) ரன்கள் எடுத்தனர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கினார்கள் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முகமது சமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்திலேயே K.L. ராகுல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
முதல் இன்னிங்ஸில் பொழிந்த விக்கெட் மழை இரண்டாவது இன்னிங்ஸிலும் விடாமல் பொழிய, பவர் பிளே முடிவதற்குள் ஆல் அவுட் ஆக வேண்டும் என்று ஆடியது போல் இருந்தது டெல்லி அணியின் பேட்டிங்.
பவர் பிளே முடிவில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதல பாதாளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த டெல்லி அணியை, சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மீட்டெடுக்க, போட்டி இன்னும் விறுவிறுப்பாகியது.

சமீர் ரிஸ்வி 70 (47) ரன்கள் எடுத்து டெல்லியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.



















