செய்திகள் :

"இந்த நிமிடம் வரை சூரி எங்களுக்கு உதவல" - 'பூ காய் கனி' பட இயக்குநர் வெற்றிவீரன் ஆதங்கம்

post image

இயக்குநர் வெற்றிவீரன் 'பூ காய் கனி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மே.16) நடைபெற்றது.

பூ காய் கனி இயக்குநர் வெற்றிவீரன்
பூ காய் கனி இயக்குநர் வெற்றிவீரன்

அப்போது இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி குறித்து ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.

சூரி குறித்து பேசிய வெற்றிவீரன், "சூரிகிட்ட இந்த நேரத்தில் நான் ஒரு தகவலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அவர் பல பேட்டிகளில் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் வெற்றிவீரன்தான் ஆரம்பக்காலத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்தார் என என்னைப் பற்றி பேசியிருக்கிறார்.

பட புரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். ஆனால் எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து தரவில்லை.

வெற்றி பெற்ற ஒருவர், எனக்கான ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கலாம். அதற்கான ஒரு சூழல் அமையவில்லையா எனத் தெரியவில்லை.

சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவர் மற்றொருவரைக் கைகொடுத்து தூக்கி விட்டிருக்க வேண்டும்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

இந்த நிமிடம் வரை சூரி அதை முயற்சி பண்ணவில்லை. அதனால் பெருமைக்காக போலி கட்டுக்கதைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

சூரியின் வெற்றிக்குப் பின் 16 நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைக் கூட கைதூக்கிவிடவில்லை. 'பூ காய் கனி' படம் மூலம் நிச்சயமாக நான் வெற்றி பெற்று இப்படி ஒரு உதவியே இனி தேவையில்லை என நான் சொல்வேன்" என்று பேசியிருக்கிறார்.

TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" - அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்... மேலும் பார்க்க

"நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பேசினார்கள்; ஆனால்.." - Fitness பயணம் குறித்து கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் அதிரடியான லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில், இயக்குநர் மிஷ்கினுடன் இவர் நடிக்கும் 'சத்யவான் சாவித்ரி' படத்தின் அறிவிப்பு ... மேலும் பார்க்க

விஜய் குறித்த மோசமான கேள்வி; "ஊடகச் சந்திப்புகள் நாகரிகமான முறையிலும் இருக்கணும்" - மாளவிகா கண்டனம்

நடிகர் மாளவிகா மோகனன் தற்போது 'சர்தார் 2', 'பாக்கெட் நாவல்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.... மேலும் பார்க்க

"விஜய் மீது எனக்கு பொறாமையா? அப்படித் தரம் கெட்ட ஆள் நான் கிடையாது" - ரஜினிகாந்த் பளீச் பேச்சு

ரஜினிகாந்த் தற்போது, 'ஜெயிலர் 2' படத்தை முடித்துவிட்டார். அடுத்தடுத்தாக அவர் ராஜ்கமல் நிறுவனத்தில் கமிட் செய்திருக்கும் படத்தில் நடிப்பதற்குத் தயராகிக் கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க

Karuppu: "கண்ணுகளா... செல்லங்களா... என் சாமிகளா... உங்க அன்புக்கு!" - நன்றி தெரிவித்த சூர்யா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண... மேலும் பார்க்க

"17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு?

நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக ம... மேலும் பார்க்க