செய்திகள் :

”விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக-வின் வாக்குகளே” - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகரில் அதி.மு.க மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.   

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, ”2026-ம் ஆண்டு சட்டமன்றத்  தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி சுனாமி போன்றது. எனவே இது நிலையானதல்ல.

அதிகாரத்தில் இருந்தால்தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும். அந்த நிலை அ.தி.மு.கவிற்கு இல்லை. த.வெ.க தலைவர் விஜய், ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஒரு நட்சத்திர நடிகரின் மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே வாக்குகள் அவர்களுக்கு விழுந்திருக்கின்றன. த.வெ.க கட்சியில் வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்க முடியும்?

தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும், தி.மு.க இரண்டாவது இடத்திற்கு வரும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்த போதிலும், கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்பேசி மூலம் மக்கள் மயங்கிவிட்டார்கள் என்று கூறினார்.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளைப் பெறுவது வெளிநாடுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்.  தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது மனம் வருந்தும் செயல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்திருப்பது காலம் தந்த கொடை. கட்சியில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேர்தல் சுனாமியில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன்.

விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க-வின் வாக்குகளே. தி.மு.கவின் வாக்குகள் அப்படியே அவர்களுக்கே சென்றது. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் வாக்குகள் விஜய் அணிக்குச் சென்றது காலச் சூழ்நிலை.” என்றார்.  

"எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து விட்டது" - அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. முதல... மேலும் பார்க்க

"அமமுக, அதிமுக MLAக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், CBI விசாரணை கேட்போம்" - TTV தினகரன் அதிரடி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். தவெக குறித்தும் அக்கட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்தும் பேசிய அவர், "அதிமுகவை அழிக்க நினைக்கும் வி... மேலும் பார்க்க

POCSO வழக்கில் மத்திய இணை அமைச்சர் பண்டியின் மகன் கைது; பதவி நீக்கம் செய்ய மோடிக்கு TRS கோரிக்கை

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், போக்சோ வழக்கில் நேற்று (மே 16) கைது செய்யப்பட்டிருக்கிறார். 17 வயது சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக, அச்சிறுமியின் தாயார் ... மேலும் பார்க்க

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் ஆனைமங்கலம் செப்பேடு; நெதர்லாந்து அரசுக்கு பிரதமர் நன்றி!

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங... மேலும் பார்க்க