செய்திகள் :

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் ஆனைமங்கலம் செப்பேடு; நெதர்லாந்து அரசுக்கு பிரதமர் நன்றி!

post image

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடான இதில், சோழர்களின் பரம்பரை மற்றும் வரலாற்று வெற்றிகள் குறித்த முக்கிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

செப்பேடுகள்
செப்பேடுகள்

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன.

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்...
பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணங்கள்...

இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாசாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

‘எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தே... மேலும் பார்க்க

'குழந்தைகள் நம் சொத்து!'- மூன்றாவது குழந்தை பெற்றால் ₹30,000.. ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபா... மேலும் பார்க்க

நெதர்லாந்திற்கு சென்ற மோடி; 18-ம் நூற்றாண்டு சோழ தேச செப்பு தகடுகள் மீண்டும் இந்தியா வருகின்றன!

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் மீண்டும் இங்கே வர உள்ளன. நேற்றிலிருந்து வருகிற 20-ம் தேதி வரை, ஐந்து நாட்டுப் பயணங்களில் இருக்கிறா... மேலும் பார்க்க

கரூர்: மூலப்பொருள்கள் விலையேற்றம்; தொழிலாளர் பற்றாக்குறை... நெருக்கடியில் ஜவுளித்துறை!

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (KTMEA) உறுப்பினர்கள் கூட்டம் 15.05.2026 அன்று சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்... மேலும் பார்க்க

Digital Lockdown: ட்ரம்ப் உடன் சீனா சென்ற டெக் தலைவர்களுக்கு என்ன பயம்? சார்ஜர் வழி டேட்டா திருட்டா?

டிஜிட்டல் பனிப்போர்தற்கால உலக அரசியலில், போர் என்பது ஆயுதங்களைச் சுமந்து கொண்டு எல்லைகளில் நடப்பது மட்டுமல்ல; தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்டு இணையவெளியிலும் தீவிரமாக நடந்துவருகிறது. அமெர... மேலும் பார்க்க

நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்தெந்த துறை?

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்போது, 'இலாகா' இல்லாத அமைச்சர்களாக 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஐந்து நாள்கள் கழித்து, இப்போது யாருக்கு எந்தத் துறை என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க