செய்திகள் :

‘எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

post image

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில், தற்போது 3 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளோம். வரும் தேர்தல்களில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் இந்த அரசு அமைந்தவுடன்தான் புதிதாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டதைப் போல செய்தி வெளியிடுகின்றன. உள்ளதை உள்ளபடி செய்திகளை மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தி.மு.க ஆட்சியில் 500 மதுக் கடைகள் குறைக்கப்பட்டன, அதற்கு முன்பு அதிமுக ஆட்சியிலும் மதுக் கடைகள் குறைக்கப்பட்டன. தற்போது பூரண முழு மதுவிலக்கைக் கொண்டு வந்ததைப் போல சொல்ல கூடாது.

ஒரு ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்து. உண்மையான மாற்றம் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

பொதுவாக மாற்றம் என்றால் இந்தியாவில் தொழில்துறை, உயர்கல்வி துறை, மருத்துவத்துறையில் நம்பர் ஒன். பொருளாதார அளவில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதில் என்ன மாற்றம் கொண்டு வரப் போகிறீர்கள்? மாற்றம் என்று சொன்னால் அதில் கொள்கை ரீதியாக ஒரு முடிவு இருக்க வேண்டும்.

மாற்றம் இதில் எல்லாம் கொண்டுவர போகிறோம் என வாக்குறுதிகளில் த.வெ.க-வினர் எதுவும் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாகக் கொண்டு வந்ததை இந்த அரசு தக்க வைத்தாலே போதும். இந்த நிலையை விட அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றால் பாராட்டுக்குரியது.

இதிலிருந்து தமிழகத்தைப் பின் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகளை இந்த அரசு எந்த அளவுக்குப் பூர்த்தி செய்கிறதா என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

sp velumani
sp velumani

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து பேசியதாக அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றச்சாட்டியது குறித்து கேள்விக்கு, “தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அரசியல் சம்பந்தமாகப் பேசவில்லை.

கையெழுத்து போடும் இடத்தில் எதார்த்தமாகச் சந்தித்து பேசியதுதான். அவர்களிடம் அரசியல் பேசும் அவசியம் இல்லை” எனப் பதிலளித்தார்.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் ஆனைமங்கலம் செப்பேடு; நெதர்லாந்து அரசுக்கு பிரதமர் நன்றி!

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங... மேலும் பார்க்க

'குழந்தைகள் நம் சொத்து!'- மூன்றாவது குழந்தை பெற்றால் ₹30,000.. ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபா... மேலும் பார்க்க

நெதர்லாந்திற்கு சென்ற மோடி; 18-ம் நூற்றாண்டு சோழ தேச செப்பு தகடுகள் மீண்டும் இந்தியா வருகின்றன!

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் மீண்டும் இங்கே வர உள்ளன. நேற்றிலிருந்து வருகிற 20-ம் தேதி வரை, ஐந்து நாட்டுப் பயணங்களில் இருக்கிறா... மேலும் பார்க்க

கரூர்: மூலப்பொருள்கள் விலையேற்றம்; தொழிலாளர் பற்றாக்குறை... நெருக்கடியில் ஜவுளித்துறை!

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (KTMEA) உறுப்பினர்கள் கூட்டம் 15.05.2026 அன்று சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்... மேலும் பார்க்க

Digital Lockdown: ட்ரம்ப் உடன் சீனா சென்ற டெக் தலைவர்களுக்கு என்ன பயம்? சார்ஜர் வழி டேட்டா திருட்டா?

டிஜிட்டல் பனிப்போர்தற்கால உலக அரசியலில், போர் என்பது ஆயுதங்களைச் சுமந்து கொண்டு எல்லைகளில் நடப்பது மட்டுமல்ல; தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்டு இணையவெளியிலும் தீவிரமாக நடந்துவருகிறது. அமெர... மேலும் பார்க்க

நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்தெந்த துறை?

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்போது, 'இலாகா' இல்லாத அமைச்சர்களாக 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஐந்து நாள்கள் கழித்து, இப்போது யாருக்கு எந்தத் துறை என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க