செய்திகள் :

'இந்த' மூன்று தேவைகளா? தாராளமாக கடன் வாங்குங்கள்; இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் | பணம் வளர்ப்போம்

post image

எதுவாக இருந்தாலும் நேரம், காலம் பார்த்து தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது கடன் விஷயத்திற்கும் பொருந்தும்.

ஆம்... கடன் விஷயத்தில் நேரம், காலத்தோடு காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

"அனைவரும் மனிதர்கள் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கு ஏற்ப செலவுகள் மாறுபடும்.

சிலர் ஆடம்பர காரைக் கூட எந்தவொரு கடனும் இல்லாமல் வாங்குவார்கள். ஆனால், சிலரோ ரூ.15,000 மொபைல் போனைக் கூட இ.எம்.ஐயில் வாங்குவார்கள்.

'அது தான் அனைத்திற்கும் லோன் உண்டே... இ.எம்.ஐ கட்டிவிடலாம்' என்று கடன் வாங்குவதற்கான மைண்ட் செட்டை எப்போதும் வைத்திருக்கக் கூடாது.

 விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

அனைத்து செலவுகளுக்கும், பணத் தேவைகளுக்கும் 'கடன்' மட்டுமே ஒரு தீர்வு என்று நினைக்காதீர்கள்.

அத்தியாவசியம், அவசரம், எதிர்காலத்தில் பயனுள்ளது ஆகியவற்றிற்கு மட்டும் கடன் வாங்குங்கள். மற்றப்படி கடனுக்கு பெரிய 'நோ' சொல்லிவிடுங்கள்.

மேலே சொன்னவற்றிற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

அத்தியாவசியம் - கல்விச் செலவு, தொழில் விரிவாக்கம்.

அவசரம் - மருத்துவ செலவுகள்

பயனுள்ளது - வீடு வாங்குவது

இதற்கெல்லாம் கடன் வாங்கலாம் என்று வரைமுறை இருப்பதுபோல, கடன் வாங்காமல் இருப்பதற்கு வரைமுறைகள் உண்டு.

ஆடம்பர சாதனங்களுக்கு, ஆடம்பர பயணங்களுக்கு, பட்ஜெட்டை தாண்டிய பிறந்தநாள் பார்டி போன்றவை, லைஃப் ஸ்டைல் அப்கிரேட் ஆகியவற்றிற்கு கடன் வாங்காதீர்கள்.

பாக்கெட்டில் இருந்தால் மட்டும் செலவு செய்யுங்கள். இல்லையென்றால், கொஞ்சம் பொறுமையாக காசு சேர்த்து வைத்து இவற்றை வாங்க அல்லது கொண்டாட பிளான் செய்யுங்கள்.

சிம்லா முதல் சுவிட்சர்லாந்து வரை: உலகம் சுற்ற ஆசையா? முழு நிதித் திட்டமிடல் உள்ளே!

அதிகாலையில் கண் விழித்ததும் சமூக வலைதளங்களைத் திறக்கிறீர்கள். யாரோ ஒருவர் பனிபடர்ந்த மலையில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் ஏதோ ஒரு தீவின் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழும... மேலும் பார்க்க

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? - 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

பணம் விஷயத்தில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருப்பது எப்படி? | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் எதிர்காலத்தின் நிதி திட்டமிடலை நாம் மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதாது. எதிர்காலத்தைச் சிக்கல் இல்லாமல் கழிக்க நிதி திட்டமிடலை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எ... மேலும் பார்க்க

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

வளைகுடா நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். ''கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டேன். ஆனால், அத்தனையும் தவறானவை என்று இப்போதுதான... மேலும் பார்க்க

Labham 4: தங்கத்தில் கிடைத்த லாபத்தை பங்கில் கிடைத்த நஷ்டத்துடன் சரிசெய்து வரியை மிச்சப்படுத்தலாமா?

கடந்த ஆண்டில் தங்கத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏறக்குறைய 75% வரை லாபம் பார்த்தார்கள். அதாவது, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் தங்க இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திரு... மேலும் பார்க்க