செய்திகள் :

`இனி தனித்தனி தணிக்கை இல்லை' - புளியறை சோதனைச்சாவடிகள் ஒருங்கிணைப்பு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

post image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி மற்றும் அதிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட காவல்துறையின் சோதனைச்சாவடிகள் இனி ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும் தனித்தனியாக தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குற்றால சீசன் காலங்களில் இந்த நெரிசல் மேலும் தீவிரமடைவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் ஆவணங்களை இரு சோதனைச்சாவடிகளிலும் தனித்தனியாக சரிபார்த்து அனுமதி பெற வேண்டிய சூழல் காரணமாக, போக்குவரத்தில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கிலும், புளியறை வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி இனி தனியாகச் செயல்படாமல், அருகிலுள்ள காவல்துறை சோதனைச்சாவடியுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க