செய்திகள் :

30 ஆண்டுகளில் 325 மில்லியன் டாலர் லஞ்சம்: சீனாவில் முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

post image

சீனாவில் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, அந்த நாட்டு நீதிமன்றம்.

நான்ஜிங் நகரின் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் யூலின்.

இவர் 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து மொத்தம் 2.21 பில்லியன் யுவான் (கிட்டத்தட்ட 325 மில்லியன் டாலர்) லஞ்சமாகப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனா
சீனா

லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு நிதியில் முறைகேடு செய்தது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் பொருளாதார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அரிதான ஒன்றாக இருந்தாலும், அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்று வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், அண்மைக் காலங்களில் பல உயரதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜி ஜின்பிங், "கட்சியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அனைத்து ஊழல் வைரஸ்களையும் முற்றிலுமாக அகற்றுவோம்" என்று உறுதியளித்திருந்தார்.

இந்தச் சூழலில் யாங் யூலினுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஊழலுக்கு எதிரான சீன அரசின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் ... மேலும் பார்க்க

`இனி தனித்தனி தணிக்கை இல்லை' - புளியறை சோதனைச்சாவடிகள் ஒருங்கிணைப்பு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி மற்றும் அதிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட காவல்துறையின் சோ... மேலும் பார்க்க

"எஃப்.ஐ.ஆர்-லேயே கை வச்சுட்டாங்க!" - செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! - பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருநாவுக்கரசு உள்ப... மேலும் பார்க்க

Deemed University: ``இது அலட்சியமா அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா?" - அண்ணாமலை கேள்வி

Aதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" அந்தஸ்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, சாதாரண கல்லூரிகள் ஏதேனும் ஒரு அ... மேலும் பார்க்க

”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” - சொல்கிறார் வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாள... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! | Photo Album

முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய் மேலும் பார்க்க