அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்...
இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!
நந்தனத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை நந்தனத்தில் டிச.27-ஆம் தேதி தொடங்கிய பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் (ஜன. 12) நிறைவடைகிறது. புத்தகக் காட்சியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகையான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகக் காட்சி வார நாள்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் நடைபெற்று வந்தது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள புத்தகக் காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.
புத்தகக் காட்சியின் தேதி நீட்டிக்கப்படுவதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இருப்பினும், புத்தகக் காட்சி நீட்டிப்பு தேதி குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமையுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுவதாகவும் பபாசி செயலர் முருகன் விளக்கமளித்தார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!