செய்திகள் :

``இன்ஸ்டா ரீல்ஸ் தயாரிப்பவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் அல்ல" - நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை!

post image

Pபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்பை, இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' தயாரிப்பாளர்கள் மற்றும் யூடியூபர்கள் தன்னிச்சையாகக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக டெல்லி காவல்துறை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

டெல்லி காவல்துறை

அந்தப் பிரமாணப் பத்திரத்தில், ``தொழில்முறைப் பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தனிப் பிரிவினர். வணிக நோக்கங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்காகவும் கேமரா மற்றும் மைக்குகளை ஏந்திச் செல்லும் நபர்களையும், செய்தியாளர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. இத்தகைய சமூக வலைதள கண்டென்ட் கிரியேட்டர்ஸ்களை பத்திரிகையாளர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்த முடியுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.

அங்கீகார அட்டை இல்லாத செய்தியாளர்கள் உட்பட தேசிய, சர்வதேச மற்றும் பிராந்திய ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முழுமையாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறை பதிவு செய்த வீடியோக்களையும் சமர்பித்திருக்கிறோம். போராட்டக் களத்தில் கேமராக்களுடன் நின்றவர்களில் பலர் யூடியூபர்கள் மற்றும் ரீல்ஸ் தயாரிப்பாளர்களாக இருந்ததால், கூட்ட நெரிசலில் உண்மையான பத்திரிகையாளர்களையும் போராட்டக்காரர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் காவலர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது.

மேலும், சிலர் தங்களைப் பத்திரிகையாளர்கள் எனப் பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், 'பிரஸ்' அட்டை வைத்திருந்த மாணவி ஒருவர் விசாரணையின் போது தான் இன்னும் பத்திரிகையாளராகவில்லை என ஒப்புக்கொண்ட வீடியோ ஆதாரமும் இருக்கிறது.

டெல்லி உயர் நீதிமன்றம்

சில யூடியூபர்கள் வீடியோ எடுப்பதற்காகக் காவல்துறையினருடன் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தவிர, ரீல்ஸ் தயாரிப்பாளர்கள் கூடத் தடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களைத் திட்டமிட்டுத் தடுக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை. சட்டவிரோதமாகக் கூடியவர்களைக் கலைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடையாளம் தெரியாமல் தவறுதலாகப் பிடிக்கப்பட்டவர்கள் கூட, விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தடை உத்தரவுகள் அனைவருக்கும் பொதுவானவை."

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

கோவை பெரியார் அறிவுலகம்: சோதனைக்கு உட்படுத்தப்படும் அனைத்து பதிப்பக நூல்கள்!

கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அற... மேலும் பார்க்க

ஈரோடு: போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூங்கா! | Photo Album

ஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப... மேலும் பார்க்க

பிரேக் குறைபாட்டுடன் 463 கி.மீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவு... என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே பாரத் ரயில் ஒன்று சுமார் 463 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அ... மேலும் பார்க்க

மேகதாது: "பாஜக தலைவர் வீட்டில் சதியாலோசனைக் கூட்டம்; கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி"- வைகோ சொல்வது என்ன?

ம.தி.மு.க நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நெல்லைக்கு வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி கு... மேலும் பார்க்க

தமிழ்நாடு vs ஆந்திரா: 'முதலீட்டை பொறுத்தவரை ஸ்ரேட்டஜி ரொம்ப முக்கியம்'- சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் முதலீட்​டாளர்​கள் மாநாடு-2026 நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டை விட ஆந்திராவில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்யவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாக... மேலும் பார்க்க

இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் - இதுதான் காரணமா?

நார்வே நாட்டை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஹெல் லிங், இந்தியா வருவதற்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்... மேலும் பார்க்க