செய்திகள் :

'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்...' - திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!

post image

திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில், பெரியளவில் வெளிப்படையாக தங்களுடைய எதிர்பார்ப்பை பேசாமல் இருந்த திருமாவளவன், திடீரென கறாராக டிமாண்ட் ஏற்றும் வகையில் ஒரு நகர்வை செய்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திடீரென விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டிய திருமா, அந்தக் கூட்டத்தில் 8 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஈரான், இஸ்ரேல் விவகாரம் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கும் அவற்றில் எட்டாவது தீர்மானம்தான் முக்கியம்.

திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் ராஜ்ய சபா சீட்டையும் கேட்டுப்பெற வேண்டுமென அந்த தீர்மானம் கூறுகிறது. அந்த 8 வது தீர்மானம், 'திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிக'வுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.' எனக் கோரப்பட்டிருக்கிறது.

திருமா என்ன ட்விஸ்ட் கொடுக்கப் போகிறாரோ?

தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சிய... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' - 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க