செய்திகள் :

தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி

post image

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சியில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த விஜய்யின் வாகனத்தை, கட்சித் தொண்டர்கள் பலர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என தவெக நிர்வாகிகள் எச்சரித்தனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில், திருச்சி, கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் விக்னேஷ், 19, அவரது நண்பர் ஹாரூண், 20 இருவரும் டூவீலரில் பின்தொடர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினர்.

இதில் விக்னேஷ்க்கு தலையில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

காலில் பலத்த காயம் ஏற்பட்ட ஹாரூணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், விக்னேஷை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி ஆகியோர் சிகிச்சையில் இருந்த ஹாரூணை மட்டும் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.

விக்னேஷ் ஐ.சி.யு வார்டில் இருந்ததால் அவரைச் சந்திக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து தவெக மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிகிச்சைக்குச் செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை வெளியிடப்பட்டது.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில், விக்னேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, கடந்த மார்ச். 20ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சை இருந்த விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்...' - திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!

திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில்,... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' - 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க