செய்திகள் :

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

post image

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தனி தொகுதி த.வெ.க வேட்பாளர் தமிழ் செல்விக்கு ஆதரவாக

செங்கோட்டையன்

சத்தியமங்கலம் பகுதியில் இன்று வாகன பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட செங்கோட்டையன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசியிருக்கிறார். பழைய நினைவில் தவறுதலாக பேசியதை உணர்ந்து உடனடியாக சுதாரித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், " இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டே பழகி விட்டேன். கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது மூதாட்டி ஒருவர் உங்களுக்காக இரட்டை இலை சின்னத்திற்கே எப்பொழுதும் போல வாக்களிப்போம் என்றார்.

செங்கோட்டையன்

இல்லை. நான் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் எனக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அதற்கு நிச்சயம் உங்களுக்கு தான் எனது வாக்கு என்று கூறினார்" என சமாளித்து முடித்திருக்கிறார்.

ஐசியூவில் சிகிச்சை பெறும் வானதி சீனிவாசன் - மருத்துவமனை விளக்கம் என்ன?

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கா... மேலும் பார்க்க

கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? - வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அலி காமேனி மறைவிற்கு பிறகு அவரது மகன... மேலும் பார்க்க

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு ப... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க