செய்திகள் :

‘இவனுக்கு பெரிய பெரிய கனவுகள் இருக்கு'னு அன்னைக்கு SAC சார் சொன்ன வார்த்தைகள்!' - ரபி பெர்னார்டு

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் வெற்றி பெற்ற சான்றிதழை வாங்கச் சென்றிருக்கிறார்.

இந்தச் சூழலில் லயோலாவில் விஜய்க்கு வகுப்பெடுத்த முன்னாள் எம்.பி.யும் லயோலாவின் முன்னாள் பேராசிரியருமான ரபி பெர்னார்டிடம் பேசினோம்.

ரபி பெர்னார்டு

‘’மீடியாவுக்கு வருவதற்கு முன் நான் சில காலம் லயோலா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தேன். நான் அங்க வேலை பார்த்திட்டிருந்தப்பதான் விஜய்க்கு அங்க அட்மிஷன் போட்டாங்க. அடுத்த சில நாட்களில் ஒரு நாள் விஜய்யின் அம்மா அப்பா சூளைமேட்டில் இருந்த எங்க வீட்டுக்கு விஜயைக் கூட்டிட்டு வந்தாங்க.

அப்ப எஸ்.ஏ.சி சார் சொன்ன வார்த்தைகள் இப்பவும் நல்ல நினைவுல இருக்கு. ‘இவனுக்கு வாழ்க்கையில பெரிய பெரிய கனவுகள் இருக்கு. அதனால சிறந்த ஒரு மனிதனா இவனை உருவாக்கணும்னுதான் இங்க சேர்த்திருக்கோம். நீங்க கைடு பண்ணி வழிநடத்தணும்னு' என் கையில விஜய் கையைப் பிடிச்சுக் கொடுத்தார்.

தவெக தலைவர் விஜய்

பிறகு அங்கேயே கொஞ்ச காலம் படிச்சார். ரொம்ப அமைதியா இருப்பார். படிச்சிட்டிருக்கிற போதே சினிமா வாய்ப்புகள் அமைஞ்சுட்டதால அதுலயும் கவனம் செலுத்தினார். முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் ஷூட் லயோலாவில் நடந்தது. வகுப்பு முடிஞ்சதும் நேரா அங்க ஷூட்டிங் போவார்.

பிறகு நானும் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியில வந்துட்டேன். அதனால அதன் பிறகு தொடர்பு இல்லை. ஆனா எங்கயாச்சும் பார்த்தா என்னுடைய புரபசர்னு மரியாதையாப் பேசுவார்.

இன்னைக்கு அவர் படிச்ச, படிச்சிட்டிருக்கிற போதே முதல் படத்துல நடிச்ச அதே கல்லூரியில வெற்றிச் சான்றிதழை வாங்கி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா பதவியேற்கப் போறார்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. " என்றார்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க