செய்திகள் :

ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து - இஸ்ரேல் எச்சரிக்கை

post image

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.

தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

ஏன் இவ்வளவு பரபரப்பு?

டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது.

இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

முக்கியமாக,‌ இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது.

ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம்.

இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும்.

ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது".

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான... மேலும் பார்க்க

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது.அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவி... மேலும் பார்க்க