செய்திகள் :

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

post image

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே - “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) கூட, நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திலும் இதைத்தான் கூறியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஐ.நாவில் ட்ரம்ப் பேச்சு

அவர் அங்கே, “நான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர்கள் மீண்டும் தங்களைச் சீரமைத்துக்கொண்டு, மத்திய கிழக்கிலோ... ஏன் உலகிலேயே கூட மிகச் சிறந்த ஒரு நாடாக உருவெடுக்க வழிவகுப்பதா?

அல்லது ஈரானிய இஸ்லாமியக் குடியரசை உடனடியாக அழித்து, இனி யாரையாவதையோ அல்லது நாட்டையோ அவர்கள் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார்.

ஈரான் கலாய்

ட்ரம்பின் இந்தப் பேச்சைக் கலாய்க்கும் விதமாக, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் “ட்ரம்ப், ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவதாகப் பேசுகிறார்.

ஆனால் ஈரான் அவ்வளவு பாதுகாப்பில்லாத நாடு அல்ல என்பது அவருக்கும் தெரியும்.

ஏனெனில், சமீபகாலமாக அவர்கள் ஹாலிவுட்டுக்குப் பதிலாக பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தியதிலிருந்தே...” என்கிற கேப்ஷனோடு தெலுங்கு நடிகர் பாலய்யா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் வீடியோ கிளிப்பை ஷேர் செய்துள்ளது.

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" - இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் த.வெ.க-வினரை கதிகலங்கச் செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அண்மைக்காலமாக த.வெ.க - கம்யூனிஸ்டு... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: மதுரைக்கு வரும் முதல்வர் விஜய் ; சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்... மேலும் பார்க்க

போட்டு கொடுத்த நேரு தரப்பு?| சிக்கலில் மருமகன் | அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தி ஸ்கெட்ச் | கழுகார்

கல்லாகட்டும் 'பழக்' கட்சி நிர்வாகிகள்!'"எங்க வாக்கு உங்களுக்குதான்..."மதுராந்தகம் இடைத்தேர்தலில் இலைக்கட்சிக்கு ஆதரவாக பழக் கட்சி இருக்குமென எதிர்பார்த்த நிலையில், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவி... மேலும் பார்க்க

SIR சர்ச்சை: "பாஜக, RSS, தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகம் செய்துள்ளன” - ராகுல் காந்தி

நேற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தேர்தல் ஆணையம் குறித்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையே அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்ப... மேலும் பார்க்க

முதல்வரின் லண்டன் பயணம்: “அறுவை சிகிச்சையை முன்பே திட்டமிட்டேன்; ஆனால்...” - அமைச்சர் கீர்த்தனா

கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொழில்முறை பயணத்திற்காக லண்டன் சென்றிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.‘முதலீட்டை ஈர்ப்பதற்காக’ என்று கூறப்பட்ட இந்தப் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர்... மேலும் பார்க்க