செய்திகள் :

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

post image

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.

இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.

ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் - மோடியின் சமீபத்திய பயணம்.

கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்‌ மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, 'நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்' அவருக்கு வழங்கப்பட்டது.
மோடி - நெதன்யாகு
மோடி - நெதன்யாகு

அதெல்லாம் சரி... இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு...

"மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர்‌ விருது கூட பெற்றிருக்கிறார்.

இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின்‌ 'நல்ல நண்பர்கள்' இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது".

மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும... மேலும் பார்க்க

நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளி... மேலும் பார்க்க

பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா மீது போக்சோ வழக்குப் பதிவு - பின்னணி என்ன?

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஓய்வுபெற்ற பிறகு பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். ​... மேலும் பார்க்க