செய்திகள் :

"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்

post image

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி, உலக நாடுகளுக்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

இது உலக நாடுகளுக்கு எண்ணெய் கிடைப்பது... எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

அமெரிக்க மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்பு வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள மிட்-டேர்ம் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைப் பாதிக்குமோ என்கிற சந்தேகம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.

ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களால் சுலபமாக அணு ஆயுதத்தைப் பெற முடியும் என்று நினைத்துக்கொண்டு, என்னை ஆட்சியில் இருந்து தூக்குவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் ஈரான் தீவிரமாகச் செய்து வருகிறது.

ஆனால், அவர்களுக்கு அணு ஆயுதம் ஒருபோதும் கிடைக்காது.

ஒருவேளை நாம் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தால், திடீரென ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட்டால் என்னவாகும்? அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள். நான் அவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் அந்தச் சமயத்தை உறுதியாகப் பயன்படுத்துவார்கள்.

இஸ்ரேலையே முற்றிலும் அழித்திருப்பார்கள். மத்தியக் கிழக்கையே நிர்மூலமாக்கியிருப்பார்கள். ஏன், அமெரிக்காவின் சில நகரங்கள் மீதே தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.

"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' - திருமா சொல்வதென்ன?

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். " தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக... மேலும் பார்க்க

``மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு..." - சீமான் ஆவேசம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

BRICS மாநாடு: புதின், ஜி ஜின்பிங், மசூத் பெசெஷ்கியானை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மோடி!

இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும். அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை இந... மேலும் பார்க்க

"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்..." - எடப்பாடி பழனிசாமி

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் ... மேலும் பார்க்க

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அம... மேலும் பார்க்க

கொத்தடிமைக் கொடூரம்: ``கர்ப்பிணி மரணம்; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இ... மேலும் பார்க்க