விஜய்: ஸ்வீட் பாக்ஸூடன் வந்த 50+ நிர்வாகிகள்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்...
ஈரான் போர்: ட்ரம்ப் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை; கச்சா எண்ணெயின் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன?
நேற்று இந்நேரம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி கிட்டத்தட்ட 114 டாலர்கள் அளவில் வர்த்தகமாகி வந்தது.
ஆனால், இன்று சரிந்து ஒரு பேரலுக்குச் சுமார் 85 டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இது கிட்டத்தட்ட 25 சதவிகித வித்தியாசம் ஆகும்.
இந்தத் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன?
> நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்' என்று தெரிவித்தார்.
> நேற்று கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி விட்டது. அடுத்து அது 150 டாலர்களைத் தொடுவதை விரும்பவில்லை ஜி7 நாடுகள்.
அதனால், அந்த நாடுகள் தங்களிடம் இருக்கும் மூலோபாயப் பெட்ரோலிய இருப்புக்களை சந்தைக்குள் எடுத்துவர தயாராக இருக்கிறது.

> நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.
அது குறித்து அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், 'ரஷ்யாவின் மில்லியன் கணக்கான எண்ணெய் பேரல்கள் மீது இருக்கும் வரிகளை நீக்க அமெரிக்கா யோசனையில் உள்ளது' என்று தெரிவித்தார்.
> நேற்று ட்ரம்ப் விரைவில் ஈரான் போர் முடியும் என்று சொன்னதும், பயத்தில் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அந்த முதலீடுகளை 'சட்டென' விற்றனர்.
இந்த 4 காரணங்களிலும் மிக முக்கியமானது - ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்கிற ட்ரம்பின் அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதுமே சரிவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சந்தை கொஞ்சம் மீண்டது.
அடுத்ததாக, இதுவே தற்போது ஆசியச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. நேற்று 'சிவப்பு'களில் தத்தளித்த சந்தைகள், இப்போது பாசிட்டிவாக மாறியுள்ளன.















