செய்திகள் :

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப் சொல்வது இருக்கட்டும்; ஈரான் என்ன சொல்கிறது? தாக்குதலை நிறுத்துகிறதா?

post image

"பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக, பாதுகாப்பாகத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரம் போர் நிறுத்தம்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பிற்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அந்த அறிக்கை கூறியிருப்பதாவது...

"ஈரான் சார்பாக, என்னுடைய அன்புள்ள சகோதரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் முனிரின் போர் நிறுத்தத்திற்கான அயராத உழைப்பிற்கு நன்றியும், பாராட்டுகளும்.

பிரதமர் ஷெரீபின் சகோதரத்துவமான கோரிக்கைக்கும்... அமெரிக்காவின் 15 பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டும், அமெரிக்க அதிபர் ஈரானின் 10 பரிந்துரைகளைப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாலும்... ஈரான் சார்பாக இதை நான் கூறுகிறேன்...

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்களுடைய சக்தி வாய்ந்த படைகளும் தற்காப்பு தாக்குதல்களை நிறுத்தும்.

இரண்டு வாரங்களுக்கு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க முடியும்".

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க