தங்கம் விலை Normal ஆக இருக்கிறதா, Over valued ஆக இருக்கிறதா? - நீங்களே கணக்கு போ...
ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!
ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது.
இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குறி வைத்துள்ள உலகத் தலைவர்கள் என சிலரின் பெயரை குறிப்பிட்டுள்ளது. இதில் 13 உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் யார் யார்?
1. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
2. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
3. பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர்

4. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ
5. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்
6. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
7. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி
8. ஜெர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்
9. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ
10. CENTCOM தளபதிகள் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா / பிராட் கூப்பர்
11. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ்
12. இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார்
13. பொதுப் பணியாளர் படைத் தலைவர் இயல் ஜமீர்
கடந்த 13-ம் தேதி, ஈரானின் தற்போதைய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தனது எக்ஸ் பக்கத்தில், "தலைவரைக் கொன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்து கீழ்மட்டப் பதவி வரை உள்ள அந்த அசிங்கமான, கொடூரமான குற்றவாளிகளின் பெயர்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இனி அவர்கள் படுக்கையில் நிம்மதியாக உயிரை விடலாம் என்ற தங்களின் கனவை, அப்படியே தங்களோடு கல்லறைக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்." என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ஹம்ஷஹ்ரி செய்தித்தாள் இப்படியொரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து ஈரான் அரசு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Iran's "Hamshahri" newspaper publishes the Islamic Republic's retaliatory targets. pic.twitter.com/kYwHhABM1m
— IRGC (@IRGC_Press) July 11, 2026
















