செய்திகள் :

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்குடி அரசு மருத்துவமனையில் நான்காவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வறுமையில் வாடும் இந்த குடும்பத்தை நோட்டமிட்ட ஒரு கும்பல், மருத்துவமனையிலேயே லட்சுமியிடம், "ஏற்கெனவே மூணு பெண் குழந்தைங்க இருக்கு... வறுமையில நாலாவது குழந்தையை எப்படி வளர்க்கப் போறீங்க? பேசாமல் வித்துடலாம்" என ஆசைவார்த்தை கூறி, மூளைச்சலவை செய்துள்ளது. ஆரம்பத்தில் லட்சுமி இதற்கு மறுத்ததாகக் கூறப்பட்டாலும், சூழ்ந்து நிற்கும் வறுமையால் திரைமறைவில் டீல் பேசப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி லட்சுமியின் வீட்டிற்கே வந்து குழந்தையைக் கேட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு சென்னை தம்பதி அனுப்பியதாகக் கூறி 3 பெண்கள் லட்சுமியின் வீட்டிற்குள் நைசாக நுழைந்துள்ளனர். அவர்கள் லட்சுமியிடம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிட்டு, 45 நாள்களேயான அந்தப் பிஞ்சு குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர்.

குழந்தை விற்பனை

அதன் பிறகு, குழந்தையைக் காணவில்லை என்று லட்சுமி போலீசில் புகாரளிக்க, காரைக்குடி தெற்கு போலீஸார் களமிறங்கி குழந்தையை அதிரடியாக மீட்டனர். ஆனால், போலீஸாரின் விசாரணையில் தான் கதையே வேறு என்பது தெரியவந்தது!

`மீதி காசு வராததால் வந்த புகார்!'

இந்த விவகாரம் குறித்து காரைக்குடி ஏ.எஸ்.பி ஆஷிஷ் புன்யாவை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.  

நம்மிடம் பேசியவர், "வறுமையில் இருக்கிறதைக் குறிவச்சு, மருத்துவமனையிலேயே சில பெண்கள் லட்சுமியை மூளைச்சலவை செஞ்சிருக்காங்க. 'ஏற்கெனவே மூணு பெண் பிள்ளைங்க இருக்கு, வறுமையில இதையும் வச்சு எப்படி வளர்ப்பீங்க? பேசாமல் வித்துடலாம்' என்று காசு கொடுத்து எடுத்துட்டுப் போயிருக்காங்க.

 ஆனால் அந்தக் குழந்தையின் தாயாரே அதற்குச் சம்மதம் தெரிவித்துத்தான் அந்தக் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விலை பேசி விற்க முற்பட்டுள்ளார். சென்னை தம்பதி அனுப்பியதாக வந்த பெண்கள், லட்சுமியிடம் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்தைக் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிட்டுப் போயிட்டாங்க.

ஆனால், மீதி பேசப்பட்ட 2 லட்சம் ரூபாய் காசை அவங்க கொடுக்கவில்லை. 'ஐந்து லட்ச ரூபாய்க்குப் பேசிட்டு மூணு லட்சத்தை மட்டும் கொடுத்துட்டு ஏமாத்திட்டாங்களே' என்று லட்சுமி யோசிச்சிருக்காங்க. காசு கைக்கு வராத ஆத்திரத்திலும், குழந்தையைக் கொடுத்துட்டோமே என்ற எண்ணத்திலும்தான் அவர் காவல் நிலையத்திற்கே வந்து புகார் கொடுத்திருக்கார். இது குழந்தை கடத்தல் இல்லை. குழந்தை விற்பனை. குழந்தையின் தாயாரின் சம்மதத்தோட நடந்த டீல்தான் இது எனத் தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்களின் முழுப் பின்னணியையும் விசாரித்து வருகிறோம்.

லட்சுமி காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே நாங்க அலர்ட் ஆகி, தீவிர விசாரணையில் இறங்கி குழந்தையைப் பத்திரமாக மீட்டு இப்போது உரியவர்களிடம் ஒப்படைச்சிட்டோம்.

ஆனால், குழந்தையைத் தத்துக்கொடுப்பதில் எந்தவொரு சட்டவிதிகளும் இங்கு பின்பற்றப்படவில்லை. சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் மிகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை; குஜராத்தில் பகீர்

குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட நட்பு கோரிக்கை கொலையில் முடிந்துள்ளது. காஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ், சக்திசிங் என்பவரின் உறவினரான ஒரு பெண்ணுக்... மேலும் பார்க்க

அரசு வேலைக்காக தாயைக் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி; தந்தையையும் கொன்றாரா? விசாரணையில் பகீர் தகவல்கள்

ஜெய்ப்பூரில் அரசு வேலை மற்றும் சொத்துக்காக தனது தாயைக் கொலை செய்ததாக 23 வயது இறுதி ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கூலிப்படையை நியமித்து தனது உறவினர்கள் துணையோடு ₹7... மேலும் பார்க்க

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்; போலீஸிடம் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கக்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் மகன் தனுஷ் (22). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமாகப் படித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். இவரது இன்ஸ்ட... மேலும் பார்க்க