செய்திகள் :

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்த கார்; 17 பேர் காயம் - சாலை ஓரத்தில் காத்திருந்தவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

post image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு காரில் டி.என்.பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார் மோதி விபத்து

பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு அருகில் கார் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் மனோஜ்குமார் காரை இடதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், சாலையோரம் நின்றிருந்த 15 பெண் தொழிலாளர்கள், ஒரு கல்லூரி மாணவர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒரு ஆண் என மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் மக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்த கடை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கார் மோதி விபத்து

காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்: சிப்காட்டில் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவன கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

"எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!"- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நில... மேலும் பார்க்க

ஸ்பெயினில் பயங்கரம்: இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 30 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்!

ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் - 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந... மேலும் பார்க்க

ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று... மேலும் பார்க்க

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். ... மேலும் பார்க்க

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க