செய்திகள் :

ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' - கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்

post image

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் வாகன பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், பவானி தொகுதியில் நேற்றிரவு உரை நிகழ்த்தியிருக்கிறார்.

தங்க காசு டோக்கன்
தங்க காசு டோக்கன்

இந்த நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களைத் திரட்டும் முயற்சியாக கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்குக் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்ததுடன் அதற்கான டோக்கனையும் கூட்டம் தொடங்கும் முன்னரே விநியோகம் செய்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் உரை நிறைவடைந்ததும் குலுக்கல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், கூட்டம் நிறைவடைந்ததும் தங்க நாணயத்திற்கான குலுக்கல் நடைபெறும் என மக்கள் இரவு நீண்ட நேரமாக கையில் டோக்கனுடன் காத்திருந்துள்ளனர்.

கூட்டம் முடிந்ததும் குலுக்கல் முறையில் 10 நபர்களைத் தேர்வு செய்து அரை கிராம் தங்க நாணயத்தைப் பெற அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட டோக்கன்களை வென்ற 10 நபர்களும் கூட்டம் முடியும் முன்னரே பாதியில் வெளியேறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

தங்க காசு டோக்கன்
தங்க காசு டோக்கன்

சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து தங்க காசுகள் வழங்கப்படும் என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என டோக்கன் விநியோகம் செய்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

``ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகம் - குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றில், `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அதன் உள்ளடக்கம்...``2019-ம் ஆண்டு இந்தோனேசியா ஒரே நாளில் அதிபர், ந... மேலும் பார்க்க

புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு; எதிர்க்கும் ட்ரம்ப்... தீவிரமடையும் போர்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 10வது நாளை எட்டி இருக்கிறது. இத்தாக்குதல்களால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவரை தனது ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக' சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி இருந்தார். அப்போ... மேலும் பார்க்க

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' - இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எ... மேலும் பார்க்க