செய்திகள் :

ஈரோடு:‌ 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

post image

'சந்தனக் காடு' என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன.

இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங்களுக்குச் சட்டவிரோத சந்தைகளில் கூடுதல் வரவேற்பு என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடத்தல் கும்பல்கள் அத்துமீறி நுழைந்து சந்தன மரங்களைக் கடத்திச் செல்கின்றனர்.

வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டும் சந்தன மரக்கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.

சந்தன மரக்கடத்தல்
சந்தன மரக்கடத்தல்

இந்த நிலையில், அந்தியூர் பெண் வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர், கிணத்தடி பகுதியில் 2 சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபர்கள், அதனைக் கடத்திச் செல்வதற்காகப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 100 கிலோ எடையுள்ள இந்தச் சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோவிலூரைச் சேர்ந்த சடையன், பிரபு மற்றும் விளாங்குட்டையைச் சேர்ந்த ராசு என்கிற செங்காயன் ஆகிய மூன்று பேரும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கடத்தலை முறியடித்த வனத்துறையினர், மூன்று பேர் மீதும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராசுவைத் தேடி வருகின்றனர். சந்தன மரக்கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க