செய்திகள் :

``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை" - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

post image

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'.

லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன.

 ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.

"ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன்.

விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.

'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால் அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை.

பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகையும், எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும்.

எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள்.

உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர், இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க"- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவ... மேலும் பார்க்க

Soori: "பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல!" - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!

நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாத... மேலும் பார்க்க

விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!

விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு... மேலும் பார்க்க

Vaa Vaathiyaar: "கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க" - 'ஏஸ்' பட இயக்குநர் குற்றச்சாட்டு

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்... மேலும் பார்க்க

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.“பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல... மேலும் பார்க்க