கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு மு...
தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க"- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!
ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது.
இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது.
நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன.
படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!"
















