செய்திகள் :

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்

post image

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இதையடுத்து இரு தேசியாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து இரு கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத் பவாருடன் அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

பாராமதியில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு அஜித் பவார் இதற்காக சென்றார். அங்கு சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் ரோஹித் பவார் ஆகியோருடன் அஜித் பவார் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து விவாதித்தார்.

இறுதியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இச்சந்திப்பு குறித்து சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பாராமதியில் நடந்த வேளாண் கண்காட்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து அஜித் பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' வேளாண் கண்காட்சிக்கு சரத் பவார் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றாக வேளாண் கண்காட்சிக்கு சென்றோம்'' என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். சரத் பவார் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''12 ஜில்லா பரிஷத் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர்.

சில இடங்களில் நட்புரீதியாக ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம்'' என்றார்.

ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்... மேள தாளத்துடன் உற்சாகம்! - Album

ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109... மேலும் பார்க்க

``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் ... மேலும் பார்க்க

`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்'- ஹோட்டலில் கவுன்சிலர்கள்... பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்த... மேலும் பார்க்க

வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் ... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது" - செல்வப்பெருந்தகை

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க