``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" - ட்ரம்புக்கு எதிராகும...
வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன.
மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன.

இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும்.
இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம்.
தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.










