BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! ...
CAREER: டிகிரி படித்திருந்தால் போதும்; மத்திய வங்கி பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் மற்றும் டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் (இந்தி).
மொத்த காலிப்பணியிடங்கள்: 159 (தமிழ்நாட்டில் 9)
வயது வரம்பு: 21 – 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் பணிக்கு கல்லூரியில் கட்டாயம் தமிழ், இந்தி படித்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மொழி திறன் தேர்வு.
குறிப்பு: டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு தேதி:
முதல்நிலை தேர்வு – பிப்ரவரி 21, 2026
முதன்மை தேர்வு – ஏப்ரல் 12, 2026
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
முதல்நிலை தேர்வு: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம்.
முதன்மை தேர்வு: சென்னை
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















