`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் வி...
உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.
இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்குமூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இந்தச் சாக்குமூட்டை குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவரது தலையைக் காணவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.
போலீஸார் உடனே வினய் என்ற அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கொலை செய்யப்பட்ட பெண் மிங்கி சர்மா என்று தெரிய வந்தது. மிங்கியும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் என்பவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் ஒரே துறை என்பதால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதில் வினய் தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் இதற்கு மிங்கி சர்மா சம்மதிக்க மறுத்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்தது.
இதே பிரச்னையில் அவர்கள் தனியாகச் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வினய் அங்கு இருந்த தேங்காய் உடைக்கும் கத்தியை எடுத்து தனது காதலியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மிங்கி சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து மிங்கியின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினார். தலையை மட்டும் தனியாக எடுத்து அதனைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைத்துக்கொண்டார். உடலின் மற்ற பகுதிகளை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு டேப்பால் ஒட்டினார். அதனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி இரண்டையும் எடுத்துக்கொண்டு யமுனை ஆற்றில் போடுவதற்காகச் சென்றார்.
வழியில் தலை இருந்த பிளாஸ்டிக் பேக்கை ஒரு கால்வாயில் போட்டுவிட்டார். எஞ்சிய உடல் பகுதியை யமுனை ஆற்றில் போட எடுத்துச் சென்ற போது பயத்தில் அந்தச் சாக்குமூட்டையை ஆற்றுப்பாலத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. வினயைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
















