செய்திகள் :

"உன் கணவர் இறந்துவிடுவார்" - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

post image

நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இவர் தன்னிடம் வரும் பெண்களிடம் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறுவார். அவரை 2022-ஆம் ஆண்டில், 28 வயது பெண் ஒருவர் தனக்கு ஒரு திருமண வரன் அமைந்ததைத் தொடர்ந்து, அந்த ஜோதிடரை அணுகினார்.

அந்த ஜோதிடர் அவருக்கு ஒரு பதக்கத்தைக் கொடுத்து, அதை ஒருபோதும் கழற்றக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இருப்பினும், ஒரு தேர்வு எழுதுவதற்காக அப்பெண் அந்தப் பதக்கத்தைக் கழற்றினார். துர்வாய்ப்பாக, ஒரு வாரத்திற்குள்ளாகவே அவரது திருமணப் பேச்சு முறிந்துபோனது. இதனால் ஜோதிடர் மீதான நம்பிக்கை அப்பெண்ணுக்கு மேலும் அதிகரித்தது.

அசோக் கராட்
அசோக் கராட்

இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜோதிடர், தனக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக அப்பெண்ணை நம்பவைத்து, சடங்குகளைச் செய்யுமாறு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்.

பின்னர், உடலை மரத்துப்போகச் செய்யும் ஒரு கலவையை அப்பெண்ணுக்குக் கொடுத்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததார். அதை எதிர்த்தால் அவருக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது என்று மிரட்டி இக்காரியத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை இது போன்று செய்து இருக்கிறார். அப்பெண் மட்டுமல்லாது அங்கு வரும் பெண்களிடம் இது போன்று அவர்களது பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு அந்த ஜோதிடர் பெண்களின் மனதில் அவர்களின் கணவர்களுக்கு மரணம் நேரிடும் என மிரட்டியோ அல்லது மாந்திரீகச் சடங்குகள் தொடர்பான பயத்தை ஏற்படுத்தியோ அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜோதிடர் தனது அலுவலகத்தில் ரகசியமாகக் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வைத்திருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 28 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

58 பெண்களின் ஆபாச படங்கள்

அவரை நேரடியாகச் சென்று கைது செய்தால் பிரச்னை ஏற்படும் என்று கருதிய போலீஸார் அவரது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு திருடன், திருடன் என்று கூறி கூச்சலிட்டனர். அந்நேரம் ஏற்பட்ட பரபரப்பில் போலீஸார் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்து படுக்கை அறையில் இருந்த அசோக்கைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்தபோது 58 பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது.

அவர் தனது அலுவலகத்தில் ஓகஸ் பிராபர்டி டீலர் என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் ஒருபோதும் அத்தொழில் செய்தது கிடையாது என்று போலீஸார் தெரிவித்தனர். அதோடு சமுதாயத்தில் தன்னை மிகவும் அந்தஸ்துள்ள ஜோதிடராகக் காட்டிக்கொண்ட அசோக் அரசியல்வாதிகளுடன் நெறுங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

நாசிக் அருகில் உள்ள மிர்கான் பகுதியில், அவருக்குச் சொந்தமான ஈசான்யேஸ்வர் கோயிலும், ஒரு ஆடம்பரமான ஓய்வு இல்லமும் அமைந்துள்ளன. அங்கு பல முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்க நபர்களும் அடிக்கடி வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

போலீஸார் அவரது பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தியதில் துப்பாக்கி மற்றும் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர அவருக்குச் சொந்தமான கோயிலிலும் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மாநில அரசு ஐ.பி.எஸ். அதிகாரி தேஜஸ்வினி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து இருக்கிறது.

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை - கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படி... மேலும் பார்க்க

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.எ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர்

தூத்துக்குடி பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், 9 நாள்களுக்குப் பிறகு டி.என்.ஏ பரிசோதனை முடிவின் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

`போலீஸ் துணையுடன் தற்கொலைக்கு.!' - வீட்டுக்குள் இருந்தே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவராக இருக்கிறார். தஞ்சாவூர், பால்பண்ணை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ஷேக் சிர... மேலும் பார்க்க

தருமபுரி: கால்பந்தாட்ட வீரர் தற்கொலை; போக்சோ வழக்கு பதிவு செய்ததுதான் காரணமா?

போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவான கால்பந்தாட்ட வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போக்சோதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தை... மேலும் பார்க்க

திருச்சி: 'முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி' - சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது:34 ). இவரது மனைவ... மேலும் பார்க்க